சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 07-07-2019 | 6:15 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. Millennium Challenge Corporation எனப்படும் MCC உடன்படிக்கை தொடர்பில் ஜனநாயக ரீதியில் செயற்படாவிடின், பின் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் என அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 02. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு 6 புதிய அரசியல் கட்சிகள் பதிவுசெய்யுமாறு கோரியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 03. பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெத்தைகள் அடங்கிய 65 கொள்கலன்கள் கழிவுப்பொருட்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். 04. யாழ். காங்கேசன்துறை கடற்பகுதியில் புதிய வகையான பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 05. நாட்டைப் பாதிப்பிற்குள்ளாக்கும் எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவதற்கு தமது ஆட்சிக்காலத்தில் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். 06. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவானதும் வௌிப்படையானதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி மியன்மாரில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 02. கலிபோர்னியாவின் தெற்கு பிராந்தியத்தில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.