கைவிடப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் அதிக குளங்கள்

கைவிடப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் அதிக குளங்கள்

by Staff Writer 07-07-2019 | 1:00 PM
Colombo (News 1st) பல்வேறு காரணங்களால் நாட்டில் 1958 குளங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக, கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணம் மற்றும் மொனராகலை, அநுராதபுரம், குருணாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான குளங்கள் கைவிடப்பட்டுள்ளன. இந்தக் குளங்கள், வனவள பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உரித்தான காணிகளில் உள்ளதால், மீண்டும் அவற்றைப் புனரமைப்பது தொடர்பில் சிக்கல் காணப்படுவதாகத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் தலைமை அதிகாரி பிரபாத் விதாரண தெரிவித்துள்ளார். இவ்வாறு கைவிடப்பட்ட குளங்களைப் புனரமைப்பது குறித்து வனவள பாதுகாப்புத் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் வறட்சியுடனான வானிலை நிலவுகின்ற சந்தர்ப்பங்களில், நீர்ப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய முடியும் எனவும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.