9 பில்லியன் ரூபா செலவில் நுவரெலியா – நானு ஓயா இடையில் கேபிள் கார் போக்குவரத்து கட்டமைப்பு நிர்மாணம்

9 பில்லியன் ரூபா செலவில் நுவரெலியா – நானு ஓயா இடையில் கேபிள் கார் போக்குவரத்து கட்டமைப்பு நிர்மாணம்

9 பில்லியன் ரூபா செலவில் நுவரெலியா – நானு ஓயா இடையில் கேபிள் கார் போக்குவரத்து கட்டமைப்பு நிர்மாணம்

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2019 | 5:14 pm

Colombo (News 1st) நுவரெலியா மற்றும் நானு ஓயா இடையில் கேபிள் கார் போக்குவரத்து கட்டமைப்பு நிர்மாணிக்கப்படவுள்ளது.

நானு ஓயா ரயில் நிலையத்தையும் நுவரெலியா சிங்கிள் ட்ரீ மலை முகடையும் இணைத்து இந்த கேபிள் கார் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒரு தடவையில் 10 பேரை ஏற்றிச்செல்லும் வகையில், 43 கேபிள் கார்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

9 பில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்