6 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யுமாறு கோரிக்கை: தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

6 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யுமாறு கோரிக்கை: தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

6 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யுமாறு கோரிக்கை: தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2019 | 4:51 pm

Colombo (News 1st) எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு 6 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யுமாறு கோரியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலைக்கமைய குறித்த புதிய கட்சிகளை பதிவு செய்ய முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தேர்தல் இடைநிறுத்தப்பட்ட பெந்தர மற்றும் எல்பிட்டிய ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மீண்டும் நடத்தப்படவுள்ளமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் எந்தவொரு புதிய கட்சியையும் பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 95 புதிய கட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்