நாட்டை பாதிப்பிற்குள்ளாக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட இடமளிக்கப்போவதில்லை: ஜனாதிபதி

நாட்டை பாதிப்பிற்குள்ளாக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட இடமளிக்கப்போவதில்லை: ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2019 | 3:49 pm

Colombo (News 1st) நாட்டை பாதிப்பிற்குள்ளாக்கும் எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவதற்கு தமது ஆட்சிக்காலத்தில் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ”நாட்டிற்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு பிபில பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டத்தின் ஐந்தாம் செயற்றிட்டம் கடந்த முதலாம் திகதி மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமானது.

மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 319 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி ஒரு வார காலமாக இடம்பெற்ற இந்த திட்டத்தில் இன்று வரை 90,708 பேர் பயனடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்காக 42.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்