by Staff Writer 06-07-2019 | 3:40 PM
Colombo (News 1st) கொத்மலை - ப்ளூஃபீல்ட் தனியார் தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களால் தோட்ட பங்களாவிலிருந்து 15 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (05) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஆகியோர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமக்கான ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதி ஆகியன தமது கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என தெரிவித்து தோட்டத்தொழிற்சாலைக்கு முன்பாக மக்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.