கலிபோர்னியாவில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

கலிபோர்னியாவில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

கலிபோர்னியாவில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2019 | 3:32 pm

கலிபோர்னியாவின் தெற்கு பிராந்தியத்தில் 7.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அங்கு கடந்த இரு தசாப்தங்களில் பதிவாகிய சக்திவாய்ந்த நில நடுக்கமாக இது பதிவாகியுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸின் வட கிழக்கு பகுதியில் 240 கிலோமீட்டர் தொலைவில் ரிட்ஜ்கிரஸ்ட் அருகில் சுமார் 0.9 கிலோமீட்டல் ஆழத்தில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இங்கு கடந்த வியாழக்கிழமையும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

நில நடுக்கத்தால் சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், எவருக்கும் காயமோ உயிரிழப்புகளோ நேரவில்லையென கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்