ஏப்ரல் 21 தாக்குதல்: இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்பார்ப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்பார்ப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்பார்ப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2019 | 4:06 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கூறினார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் விசேட தெரிவுக்குழு கூடி பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ , சில மத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் இதுவரை பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்