இலட்சிய வரம் 2019: பொலன்னறுவை, மொனராகலை, மாத்தளையில் 5 ஆம் நாள் நிகழ்வுகள்

இலட்சிய வரம் 2019: பொலன்னறுவை, மொனராகலை, மாத்தளையில் 5 ஆம் நாள் நிகழ்வுகள்

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2019 | 9:20 pm

Colombo (News 1st) நாட்டிலுள்ள பிள்ளைகளை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் ”இலட்சிய வரம் 2019” புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்ட பேரணிக்கு மாணவர்களின் அமோக வரவேற்பு கிடைத்தது.

Anchor மற்றும் Champions Network ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்த செயற்றிட்டம் மூன்று மாவட்டங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இலட்சிய வரம் – 2019 புலமைப்பரிசில் திட்டத்தின் பேரணி ஐந்தாவது நாளாக இன்று பொலன்னறுவை, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

பொலன்னறுவை ரோயல் கல்லூரிக்கு சென்ற குழுவினர் இலட்சிய வரம் புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு தெளிவூட்டல்களை வழங்கினர்.

இலட்சிய வரம் – 2019 புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் பொலன்னறுவை நகரிலும் தௌிவூட்டல்
செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மஹியங்கனை நகர் உள்ளிட்ட சில இடங்களில் இன்று இலட்சிய வரம் – 2019 புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டப் ​பேரணி செயற்றிட்டம் இடம்பெற்றது.

மாத்தளை மாவட்டத்தின் லக்கல, தம்புள்ளை உள்ளிட்ட நகரங்களிலும் தௌிவூட்டல் செயற்றிட்டம் இடம்பெற்றது.

இலட்சிய வரம் – 2019 புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்ட பேரணி நாளை (07) திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில்
முன்னெடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்