தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பிக்க விஜேசிங்கவிற்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை

தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பிக்க விஜேசிங்கவிற்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை

தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பிக்க விஜேசிங்கவிற்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2019 | 3:34 pm

Colombo (News 1st) மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பிக்க விஜேசிங்கவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 24 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி மீதான ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு தெரணியகல பிரதேச சபையின் தலைவராக செயற்பட்ட போது, வீதி சமிக்ஞைக்கான சான்றுப்பத்திரம் வழங்குவதற்காக 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகள் சம்பிக்க விஜேசிங்க மீது சுமத்தப்பட்டது.

அதில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையால் பிரதிவாதிக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, பிரதிவாதிக்கு 4 இலட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளார்.

அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்றுக்கொண்ட நபருக்கு இரண்டரை இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 4 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 20,000 ரூபா அபராதமும் விதித்த நீதிபதி, அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 4 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்