உடல் எடையைக் கூட்ட முயலும் கங்கனா

உடல் எடையைக் கூட்ட முயலும் கங்கனா

உடல் எடையைக் கூட்ட முயலும் கங்கனா

எழுத்தாளர் Bella Dalima

05 Jul, 2019 | 5:20 pm

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா, ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்காக உடல் எடையைக் கூட்ட பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையைக் கூட்டினார். அனுஷ்காவுக்காகவே பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்து பின்னர் எடுத்தார் ராஜமவுலி. அப்போதும் உடல் எடை மெலியாததால் அனுஷ்கா நடித்த காட்சிகளை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் மெல்லிய தோற்றமாக மாற்றி அமைத்தனர்.

அனுஷ்காவின் நிலைமை தற்போது கங்கனாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் ‘தலைவி’ படத்தில் நடிக்க கங்கனா ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார்.

ஜெயலலிதாவின் 17 வயது இளமைப் பருவத்திலிருந்து இக்கதை ஆரம்பமாகிறது. அரசியலுக்கு வந்த பின்னர் ஜெயலலிதா பருமனான தோற்றத்திற்கு மாறினார். அவரைப்போல் தனது உடல் எடையைக் கூட்டி நடிக்க முடிவு செய்திருக்கிறார் கங்கனா. உடல் பருமன் ஆவதற்காக அதிக உணவு எடுத்துக்கொள்வதுடன், பல முயற்சிகளையும் அவர் செய்து வருகிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்