இலட்சிய வரம் 2019: கண்டி மற்றும் மட்டக்களப்பில் நான்காம் நாள் நிகழ்வுகள்

இலட்சிய வரம் 2019: கண்டி மற்றும் மட்டக்களப்பில் நான்காம் நாள் நிகழ்வுகள்

இலட்சிய வரம் 2019: கண்டி மற்றும் மட்டக்களப்பில் நான்காம் நாள் நிகழ்வுகள்

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2019 | 9:22 pm

Colombo (News 1st) அங்கர் மற்றும் Champion Network இணைந்து ஏற்பாடு செய்துள்ள நாட்டின் பாடசாலை மாணவர்களின் திறமைகளுக்கு மகுடம் சூட்டும் ‘இலட்சிய வரம் 2019’ செயற்றிட்டத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று கண்டி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு நடைபெற்றது.

கண்டி மாவட்டத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த குழு லும்பினி ரோயல் கல்லூரி, சீதாதேவி மகளிர் பாடசாலை உள்ளிட்ட பல பாடசாலைகளில் இலட்சிய வரம் புலமைப்பரிசில் திட்டம் தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு தெளிவூட்டல்களை வழங்கின.

அதன் பின்னர் தெல்தெனிய நகரத்தில் மக்கள் தெளிவூட்டப்பட்டனர்

இலட்சிய வரம் 2019 புலமைப்பரிசில் தொடர்பில் மட்டக்களப்பிலும் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

மட்டக்களப்பு – கல்குடா திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை , மதுரங்கேனிகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வாகரை மகா வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகள் இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

நாட்டிலுள்ள மிக திறமையானவர்களை கௌரவிக்கும் இலட்சிய வரம் 2019 புலமைப்பரிசில் திட்டம் நாளை (06) பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்