ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற பெயரில் கூட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இணக்கம்

by Staff Writer 04-07-2019 | 8:19 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற பெயரில் கூட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இணக்கம் ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற பெயரில் கூட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். பதவிகள் மற்றும் இலச்சினை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் ஒரு வாரத்திற்குள் அனைத்து எதிர்பார்ப்புகளையும் கருத்துக்களையும் திருத்தங்களையும் முன்வைக்க எண்ணியுள்ளதாகவும் மஹிந்த அமரவீர கூறினார்.
இரண்டு கட்சிகளும் இணைந்து ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர், ஒரேயொரு பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. இதுவே கலந்துரையாடலின் இறுதி பெறுபேறாக அமையும்.
எனவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.