ஷேக் ஹசினா மீதான தாக்குதல்: 9 பேருக்கு மரணதண்டனை

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா மீதான தாக்குதல் வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை

by Bella Dalima 04-07-2019 | 5:07 PM
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா மீதான தாக்குதல் வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவாமி லீக் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ஷேக் ஹசினா, 25 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. 1994 ஆம் ஆண்டு ரயில் மூலம் நாடு தழுவிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, செப்டம்பர் 23 ஆம் திகதி அவர் பயணம் செய்த ரயில் பெட்டி மீது வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹசீனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேருக்கு ஆயுள் தண்டனையும் 13 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.