கட்சியின் உள்ளக ஜனநாயகம் தொடர்பில் பிரித்தானியாவில் இருந்து அஜித் பி.பெரேரா கருத்து

by Staff Writer 04-07-2019 | 7:22 PM
Colombo (News 1st) பிரித்தானியா சென்றுள்ள அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா, பிரித்தானிய பாராளுமன்றத்தில் இருந்து தனது முகப்புத்தகத்தில் கட்சியின் ஜனநாயகம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது,
இந்நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் உள்ளன. லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் ஆகிய இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் மற்றும் உறுப்பினர்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றனர். கட்சியின் உரிமையைக் கோரும் தலைவரினால் அடுத்த தலைவர் தெரிவு செய்யப்படும் முறை இந்நாட்டில் இல்லை. எமது நாட்டின் ஜனநாயகம் தொடர்பில் நாம் அதிகளவில் பேசினாலும், சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜனநாயகம் தொடர்பில் கற்றுக் கொள்ள விருப்புவதில்லை, இல்லாவிடின் நாம் தெரியாதது போன்று இருக்கிறோம். பிரித்தானிய பாராளுமன்றத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் முறை தொடர்பில் அதிகளவில் பேசுவோரும், கட்சியின் உள்ளக ஜனநாயகம் தொடர்பில் பேசுவில்லை. கட்சிக்குள் ஜனநாயகம் உரிய முறையில் பேணப்பட வேண்டும். சரியான வேட்பாளரை தேர்தலில் முன்நிறுத்த அந்த தலைமைத்துவத்திற்கு மக்கள் பலம் இருக்க வேண்டும். அது மாத்திரம் அல்ல, வெற்றியைப் பெற்ற பின்னர் அந்த கட்சியின் விஞ்ஞாபனத்தை வெளியிடுவோருக்கும், வெளிப்படைத்தன்மை மற்றும் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். அதனால் பிரித்தானியாவில் காணப்படும் இந்த சம்பிரதாயத்தில் கட்சியின் உள்ளக ஜனநாயகம் தொடர்பில் அனுபவம் காணப்படுகிறது. அந்த சம்பிரதாயத்தை கற்றுக்கொள்ள விருப்பமா, இல்லையா என்பதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.