by Staff Writer 04-07-2019 | 8:57 PM
Colombo (News 1s) அங்கர் மற்றும் Champion Network இணைந்து ஏற்பாடு செய்துள்ள நாட்டின் பாடசாலை மாணவர்களின் திறமைகளுக்கு மகுடம் சூட்டும் ‘இலட்சிய வரம் 2019’ செயற்றிட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று நுவரெலியா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு நடைபெற்றது.
இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் பல பாடசாலைகளுக்கு சென்ற நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தினர்.
இலட்சிய வரம் செயற்றிட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட வேலைத்திட்டம் செங்கலடி மத்திய மகா வித்தியாலயம், வாழைச்சேனை ஹிந்து வித்தியாலயம் உள்ளிட்ட பல பாடசாலைகளில் இன்று நடைபெற்றது.
இலட்சிய வரம் 2019 செயற்றிட்டத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் நாளைய தினம் பொலன்னறுவை மற்றும் கண்டி மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு நடைபெறவுள்ளன.