ஹொண்டுரஸில் மீன்பிடிப் படகு விபத்து; 26 பேர் உயிரிழப்பு

ஹொண்டுரஸில் மீன்பிடிப் படகு விபத்து; 26 பேர் உயிரிழப்பு

ஹொண்டுரஸில் மீன்பிடிப் படகு விபத்து; 26 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Jul, 2019 | 10:56 am

Colombo (News 1st) ஹொண்டுரஸில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீருக்குள் மூழ்கிய குறித்த படகிலிருந்து 47 பேர் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

படகு கவிழ்ந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மற்றும் உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் அருகிலுள்ள பியூர்டோ லெம்பிரா நகருக்கு எடுத்துச் செல்லப்படும் என, இராணுவப் பேச்சாளர் ஜொசே மெஸா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்