விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் ​போயிங் நிறுவனம்

விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் ​போயிங் நிறுவனம்

விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் ​போயிங் நிறுவனம்

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2019 | 11:35 am

Colombo (News 1st) இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் இடம்பெற்ற இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீட்டை வழங்குவதாக, போயிங் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

போயிங் நிறுவனம் தயாரித்த 737 Max ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கியதுடன் அவற்றில் சிக்கி 346 பேர் உயிரிழந்தனர்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடானது, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்வி மற்றும் ஏனைய செலவுகளுக்காக வழங்கப்படும் என, போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்களால் இழப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு விமான விபத்துகளைத் தொடர்ந்து 737 Max ரக விமான சேவை, உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்