மன்னார் மற்றும் வவுனியாவில் சிறியளவிலான நில அதிர்வுகள் பதிவாகின 

மன்னார் மற்றும் வவுனியாவில் சிறியளவிலான நில அதிர்வுகள் பதிவாகின 

மன்னார் மற்றும் வவுனியாவில் சிறியளவிலான நில அதிர்வுகள் பதிவாகின 

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2019 | 2:07 pm

Colombo (News 1st) மன்னார் – முள்ளிக்குளம் பகுதியில் சிறியளவிலான அதிர்வு பதிவாகியுள்ளதாக, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நில அதிர்வு மானிகளில் இது பதிவாகவில்லை எனக் கூறப்படுகின்றது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு புவிசரிதவியல் நிபுணர் ஒருவர் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

பிரதேச மக்கள் இதுகுறித்து தகவல் வழங்கியதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வவுனியாவின் பல பகுதிகளிலும் இன்று (4ஆம் திகதி) காலை சிறியளவான அதிர்வு உணரப்பட்டுள்ளது.

வவனியா – தாண்டிக்குளம், மகிழங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வை உணர்ந்துள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்