திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2019 | 4:23 pm

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க பொதுச்செயலர் அன்பழகன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

முரசொலியின் நிர்வாக இயக்குநராக இருந்து வரும் உதயநிதிக்கு, முதன்முறையாக தி.மு.க-வில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுக உட்பட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என்று தி.மு.க-வின் மாவட்ட அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு அனுப்பி வைத்தன.

இதற்கிடையில், இளைஞரணி செயலாளர் பதவியை வெள்ளக்கோவில் சுவாமிநாதன் இராஜினாமா செய்தார். இந்த நிலையில், இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்