by Staff Writer 04-07-2019 | 8:42 AM
Colombo (News 1st) கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 66 வீதமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 2200 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சபையின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை, சர்வதேச சுற்றுலாப் பயணத்துக்கு சிறந்த நாடு என உலகில் பிரபலமானதும் பயண வழிகாட்டியுமான 'த லோன்லி பிளானட்' சஞ்சிகை மீண்டும் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல்களால் சில நாடுகள், இலங்கைக்கான பயணத்திற்கு தடை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை சுட்டிக்காட்டியுள்ளது.