நுவரெலியாவில் Cable car திட்டம் முன்னெடுப்பு

நுவரெலியாவில் Cable car திட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

by Staff Writer 03-07-2019 | 2:15 PM
Colombo (News 1st) நுவரெலியாவிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், Cable car திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. நானு ஓயாவிலிருந்து சிங்கில் ட்ரீ மலை மற்றும் கிரகரி குளம் வரையில் Cable car திட்டத்தை ஆரம்பிப்பதற்காக நிறுவனமொன்றினால் திட்ட ஆலோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 50 மில்லியன் டொலர் முதலீட்டின் கீழ் நானு ஓயா ரயில் நிலையம், நுவரெலியா குதிரைப் பந்தயத் திடல் மற்றும் சிங்கல் ட்ரீ மலை உச்சியை கடந்த வகையில் 21 கோபுரங்களின் மேல் Cable car கட்டியெழுப்படவுள்ளது. இதன்மூலம் 10 நிமிடங்களில் செல்லக்கூடிய 86 சிறிய கூடங்களைக் கொண்டதுடன் இதில் முதல் கட்டத்தின் கீழ் 46 கூடங்களை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.. இதற்கமைவாக, இந்தத் திட்டம் முதலீட்டு சபையின் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டுவதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.