EU தலைமைப் பதவிக்கு பெண்ணொருவர் பரிந்துரை

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரிப் பதவிக்கு முதல்தடவையாக பெண்ணொருவர் பரிந்துரை

by Staff Writer 03-07-2019 | 9:25 AM
Colombo (News 1st) ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி பதவிக்கு முதல்தடவையாக பெண்ணொருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய 5 தலைமைப் பதவிகளுக்கு உறுப்பினர்களினால் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன்டர் லெயன் (Ursula vonder Leyen) ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி கிறிஸ்டின் லகார்ட், ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கியின் தலைமை அதிகாரி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். குறித்த இந்தப் பதவிக்கும் பெண்ணொருவர் பரிந்துரைந்துரைக்கப்பட்டுள்ளமை இது முதற்தடவையாகும். பெல்ஜியத்தின் இடைக்கால பிரதமர் சார்ள்ஸ் மிட்ஷல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.