லிபிய அகதிகள் முகாம் மீது வான் தாக்குதல்; 40 பேர் உயிரிழப்பு

லிபிய அகதிகள் முகாம் மீது வான் தாக்குதல்; 40 பேர் உயிரிழப்பு

லிபிய அகதிகள் முகாம் மீது வான் தாக்குதல்; 40 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2019 | 12:02 pm

Colombo (News 1st) லிபியாவிலுள்ள அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிபிய தலைநகர் திரிபோலியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 80 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆபிரிக்க அகதிகள் என்பது தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட குறித்த முகாமில் 120 அகதிகள் தங்கியிருந்ததாகவும் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்படுவதாகவும் அவசர சேவைப்பிரிவின் பேச்சாளர் ஒசாமா அலி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்