மியா ஜார்ஜ் இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர்

மியா ஜார்ஜ் இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர்

மியா ஜார்ஜ் இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர்

எழுத்தாளர் Bella Dalima

03 Jul, 2019 | 4:32 pm

தமிழில் தற்போது பிசியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், மியா ஜார்ஜ் இடத்தை பிடித்துள்ளார்.

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படம் கூட வெற்றி பெற்றது.

இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், பிரியா பவானி சங்கர் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. முதல் பாகத்தில் மியா ஜார்ஜ் ஹீரோயினாக நடித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்