காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

03 Jul, 2019 | 4:44 pm

இந்திய மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தமையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி இராஜினாமா செய்துள்ளார்.

தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எனினும், இந்த இராஜினாமாவை செயற்குழு ஏற்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவர் பதவியை இராஜினாமா செய்யும் முடிவில் தான் உறுதியாக உள்ளதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற இந்திய மக்களவை தேர்தலில் 52 தொகுதிகளில் மாத்திரம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்