இலட்சிய வரம் 2019: இரண்டாம் நாள் நிகழ்வுகள்

இலட்சிய வரம் 2019: இரண்டாம் நாள் நிகழ்வுகள்

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2019 | 9:17 pm

Colombo (News 1st) அங்கர் மற்றும் Champion Network இணைந்து ஏற்பாடு செய்துள்ள நாட்டின் பாடசாலை மாணவர்களின் திறமைகளுக்கு மகுடம் சூட்டும் ‘இலட்சிய வரம் 2019’ செயற்றிட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று பதுளை, மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு நடைபெற்றது.

எதிர்காலம் குறித்த கனவுடன் காத்திருக்கும் பிள்ளைகளை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த பயணம் கதிர்காமத்தில் நேற்று (02) ஆரம்பமானதுடன், நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இலட்சிய வரம் 2019 செயற்றிட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வான இன்று நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் ஹாலிஎல, அம்பாறை, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு சென்று மக்களை தெளிவுபடுத்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்