மன்னார் மடு திருத்தலத்தின் ஆடித்திருவிழா இன்று

by Staff Writer 02-07-2019 | 8:04 AM
Colombo (News 1st) மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடித் திருவிழா இன்று (2ஆம் திகதி) நடைபெறுகின்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுகின்றது. மடு அன்னையின் அருளைப் பெறுவதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகைதந்துள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.