இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி

இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி

by Staff Writer 02-07-2019 | 5:29 PM
Colombo (News 1st) இலங்கையின் பணவீக்கம் மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மே மாதத்தில் 5.0 வீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதம் 3.8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில் 129.0 ஆக காணப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஜூன் மாதத்தில் 130.0 ஆக அதிகரித்துள்ளமையே இதற்கான காரணமாகும்.