by Staff Writer 02-07-2019 | 2:18 PM
Colombo (News 1st) அரச மொழி தின நிகழ்வுகள் நேற்று (முதலாம் திகதி) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
அரச மொழிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வாரம் தேசிய ஒருமைப்பாட்டு, அரச கரும மொழிகள் சமூக அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் பெயரிடப்பட்டுள்ளது.
அதன் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முற்பகல் பண்டாரநாய க்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் மொழி கணக்காய்வு அறிக்கை இதன்போது அமைச்சர் மனோ கணேசனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
நான் இன்னும் கவலைப்படுகின்றேன் அமைச்சர் அவர்களே. அரசமொழிக் கொள்கை தொடர்பில், எமது சில அதிகாரிகள் பொறுப்பின்றி செயற்படுகின்றனர். வடக்கில் நிகழ்ச்சிகளுக்கு செல்கின்றபோது சிங்களத்தில் மட்டுமே முன்வைப்புக்கள் இடம்பெறுகின்றன. கிராமங்களுக்கு கொடுக்கப்படும் பத்திரங்கள் சிங்களத்தில் மாத்திரம் இருக்கின்றன. உண்மையில் இந்த விடயங்கள் தொடர்பில் பார்க்க வேண்டும. பாரிய தவறு இது
என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.