பதவியை இராஜினாமா செய்தார் இயக்குநர் பாரதிராஜா

திரைப்பட சங்க தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா இராஜினாமா

by Chandrasekaram Chandravadani 02-07-2019 | 3:33 PM
திரைப்பட சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இயக்குநர் பாரதிராஜா அறிவித்துள்ளார். கடந்த மாதம் நடத்தப்பட்ட இயக்குநர் சங்கத் தேர்தலில் பாரதிராஜா தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில், தனது பதவியைத் திடீரென இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற சங்கப் பொதுக்குழுவில் போட்டியின்றி தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. இருந்தபோதும், போட்டியிடாது பதவிக்குத் தெரிவு செய்யப்படுவதால் ஏற்படும் சங்கடங்களை உணர்ந்துள்ளதால், ஜனநாயக முறையில் தலைவரைத் தெரிவு செய்வதற்காக, எனது பதவியை இராஜினாா செய்கிறேன்
என தனது இராஜினாமா தொடர்பில் பாராதிராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பல வெற்றிடங்களுக்கான தேர்தல் இம்மாதம் நடைபெறுவதாக இருந்தது. பாரதிராஜாவின் இராஜினாமாவை அடுத்து, தலைவர் பதவிக்குமான தேர்தலும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கத்தின் 2700 உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேர்தலின்றி பாரதிராஜா தெரிவு செய்யப்பட்டமைக்கு சிலர் தமது எதிர்ப்பையும் வௌியிட்டிருந்தனர்.