அதிகமான யுரேனியம் ஈரான் வசமிருப்பதாக குற்றச்சாட்டு

அளவுக்கதிகமான யுரேனியம் ஈரான் வசமிருப்பதாக குற்றச்சாட்டு

by Staff Writer 01-07-2019 | 10:02 PM
Colombo (News 1st) அளவுக்கதிகமான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் கையிருப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் உலக வல்லரசுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அணுவாயுத உடன்படிக்கையின் கீழ் ஒத்துக்கொள்ளப்பட்ட 300 கிலோகிராம் கையிருப்பை விட ஈரான் அதிகமாக வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஈரானிடமுள்ள யுரேனிய கையிருப்பை சர்வதேச அணுசக்தி நிறுவனம், இன்றைய தினம் கணக்கிட்டதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அணு உலை எரிபொருள் மற்றும் சாத்தியமான அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள் தயாரிப்பை கடந்த மே மாதத்தில் ஈரான் 4 மடங்காக அதிகரித்திருந்தது. இது அமெரிக்க ஜனாதிபதியினால் மீள அமுல்படுத்தப்பட்ட அந்நாடு மீதான தடைகளுக்குப் பதிலளிப்பதாக அமைந்திருந்தது. இந்தநிலையில், ஈரான் குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை மீறுமாக இருப்பின், பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும் என, ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.