English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
01 Jul, 2019 | 4:13 pm
இயக்குநர் விஜய் தனது இரண்டாவது திருமணம் தொடர்பில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய விஜய் தெய்வத்திருமகள், தலைவா மற்றும் மதராசபட்டினம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இதன்பின்னர், தெய்வத்திருமகள் மற்றும் தலைவா ஆகிய படங்களில் நடித்த அமலா பால் மற்றும் இயக்குநர் விஜய் இடையே மலர்ந்த காதலானது 2014ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, 2 வருடங்களின் பின்னர் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.
இதனையடுத்து, பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக, சென்னையைச் சேர்ந்த வைத்தியரான ஐஸ்வர்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக, இயக்குநர் விஜய் அறிவித்துள்ளார்.
வாழ்க்கைப் பயணம் எப்போதுமே அனைவருக்கும் அதன் சொந்த வழியில் சிறப்பானதும் தனித்துவமானது. எல்லோருடைய வாழ்க்கையைப் போலவே என் வாழ்க்கையும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, வலி ஆகியவற்றை உள்ளடக்கிய வெவ்வேறு கட்டங்களில் பயணித்து வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய இயக்குநர் விஜய், அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதரவாக இருந்த ஊடகங்களிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாகவும் 2019 ஜூலையில் தமது திருமணம் ஒரு குடும்ப விழாவாகக் கொண்டாடப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
24 Oct, 2019 | 03:12 PM
08 Aug, 2019 | 03:18 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS