பெரும்போக நெல்லை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

பெரும்போக நெல்லை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

பெரும்போக நெல்லை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2019 | 10:07 pm

Colombo (News 1st) பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இடைத்தரகர்கள் இன்றி வர்த்தகர்கள் இந்த நெல்லைக் கொள்வனவு செய்யமுடியும் என, நெல் சந்தைப்படுத்தும் அதிகாரசபையின் பதில் தலைவர் திஸ்ஸ விஜயகோன் தெரிவித்துள்ளார்.

இந்த நெற்தொகை மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், இவற்றை விநியோகிப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விரைவாக மாவட்ட செயலாளர்களை சந்தித்து தமக்குத் தேவையான நெல்லைக் கொள்வனவு செய்யுமாறும் நெல் சந்தைப்படுத்தும் அதிகாரசபையின் பதில் தலைவர் திஸ்ஸ விஜயகோன், வர்த்தகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்