இலங்கை – தாய்லாந்து இடையே ஒப்பந்தம்

இலங்கை – தாய்லாந்து இடையே ஒப்பந்தம்

இலங்கை – தாய்லாந்து இடையே ஒப்பந்தம்

எழுத்தாளர் Staff Writer

01 Jul, 2019 | 10:06 pm

Colombo (News 1st) இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பில் வைத்து கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தினூடான இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 63000 இலங்கையர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில், இவ்வருடம் அதனை 73000 ஆக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தாய்லாந்திலிருந்து கடந்தாண்டு 10000 பேர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், அதனை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்