வட கொரிய தலைவருடனான சந்திப்பை உறுதிசெய்த ட்ரம்ப்

வட கொரிய தலைவருடனான சந்திப்பை உறுதிப்படுத்திய ட்ரம்ப்

by Staff Writer 30-06-2019 | 12:13 PM
Colombo (News 1st) வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஜி - 20 மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி, அங்கிருந்து தென் கொரியாவிற்கு பயணித்துள்ளார். இந்த விஜயத்தின்போது தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக இணைந்து ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டனர். இதன்போதே வட கொரிய தலைவருடனான சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் வட கொரியா கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.