மீன்பிடிப் படகுகளுக்கு காப்புறுதி திட்டம் அவசியம்

உரிய காப்புறுதித் திட்டம் இன்றிய படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது - இராஜாங்க அமைச்சர்

by Staff Writer 30-06-2019 | 12:50 PM
Colombo (News 1st) உரிய காப்புறுதித் திட்டத்தைக் கொண்டிராத படகுகளுக்கு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார். கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து படகுகளும் காப்புறுதியைப் பெற்றிருத்தல் அவசியம் என அவர் கூறியுள்ளார். நேற்று அம்பலாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, விபத்துக்குள்ளாகும் படகுகள் தொடர்பில் காப்புறுதியைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக மீனவர்கள் இதன்போது அமைச்சருக்கு தௌிவுபடுத்தியுள்ளர். இதன் காரணமாக மீனவக் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் காப்புறுதித் திட்டம், எதிர்வரும் காலங்களில் பகுதியளவில் சேதமடைந்த படகுகளுக்கும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.