கொழும்பின் சில பகுதிகளில் 8 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 8 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 8 மணி நேர நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2019 | 12:05 pm

Colombo (News 1st) அம்பத்தலே முதல் மட்டக்குளி வரையான நீர்க்குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளில் இரவு 7 மணி வரை 8 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர்க் கசிவிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நீர்க் குழாயைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கொழும்பு நகருக்கு பொறுப்பான உதவி பொதுமுகாமையாளர் ஏ.கே. கபுருகே குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்