புலனாய்வு தகவல் பரிமாற்றம்: இலங்கைக்கு ஒத்துழைப்பு

புலனாய்வு பிரிவு தகவல் பரிமாற்றம்: இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க சில நாடுகள் இணக்கம்

by Staff Writer 29-06-2019 | 5:39 PM
Colombo (News 1st) புலனாய்வு பிரிவின் தகவல்களை பரிமாறிக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சில வலய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்தோனேசியாவில் நடைபெற்ற வலய பயங்கரவாத ஒழிப்பு மாநாட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை அமுல்படுத்தும் ஒத்துழைப்பிற்கான ஜகார்த்தா மத்திய நிலையம் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, பயங்கரவாத தடுப்பு பிரிவு, அரச புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலர் கலந்துகொண்டனர். இதன்போது, பயங்கரவாத தடுப்பு தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு வலய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில், பயங்கரவாத தடுப்பு, புலனாய்வு சேவை, சைஃபர் குற்றம், நிதி மோசடி உள்ளிட்டவை தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

ஏனைய செய்திகள்