ஓமந்தையில் வெடிபொருட்கள் மீட்பு

ஓமந்தை காட்டுப்பகுதியில் உரப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு

by Staff Writer 29-06-2019 | 3:51 PM
Colombo (News 1st) ஓமந்தை - இலமருதங்குளம் காட்டுப்பகுதியில் உரப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. RGB வெடிகுண்டு உட்பட 20 கண்ணிவெடிகள் இதன்போது மீட்கப்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மரமென்றின் அடிவாரத்தில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் ​மேலும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.