வைத்தியர் சாஃபிக்கு எதிரான விசாரணை உரிய முறையில் இடம்பெறவில்லை: அத்துரலிய ரத்ன தேரர் முறைப்பாடு

வைத்தியர் சாஃபிக்கு எதிரான விசாரணை உரிய முறையில் இடம்பெறவில்லை: அத்துரலிய ரத்ன தேரர் முறைப்பாடு

வைத்தியர் சாஃபிக்கு எதிரான விசாரணை உரிய முறையில் இடம்பெறவில்லை: அத்துரலிய ரத்ன தேரர் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2019 | 4:17 pm

Colombo (News 1st) குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாஃபி சஹாப்தீன் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறுவதில்லை என எழுத்து மூலம் முறைப்பாடொன்றை அத்துரலிய ரத்ன தேரர் பதில் பொலிஸ் மா அதிபரிடம் நேற்று (28) கையளித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை அனுப்புமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அந்த அறிக்கையிலுள்ள விடயங்களுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்