உணவு விற்பனை நிலையங்களால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு

பாரம்பரிய உணவு விற்பனை நிலையங்களூடாக 600 ​பெண்களுக்கு வேலைவாய்ப்பு

by Staff Writer 29-06-2019 | 4:33 PM
Colombo (News 1st) பாரம்பரிய உணவு விற்பனை நிலையங்களூடாக 600 ​பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 10 மாவட்டங்களில் 22 பாரம்பரிய உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாகாண விவசாய திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் 60 வரையிலான பாரம்பரிய உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.