அகில இலங்கை பாடசாலைகள் ரக்பி லீக்: கொழும்பு ரோயல் கல்லூரி சாம்பியனானது

அகில இலங்கை பாடசாலைகள் ரக்பி லீக்: கொழும்பு ரோயல் கல்லூரி சாம்பியனானது

அகில இலங்கை பாடசாலைகள் ரக்பி லீக்: கொழும்பு ரோயல் கல்லூரி சாம்பியனானது

எழுத்தாளர் Staff Writer

29 Jun, 2019 | 9:21 pm

Colombo (News 1st) அகில இலங்கை பாடசாலைகள் ரக்பி லீக் தொடரில் கொழும்பு ரோயல் கல்லூரி சாம்பியனானது.

இந்த தொடரில் ரோயல் கல்லூரி சாம்பியனாகும் தொடர்ச்சியான மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அகில இலங்கை பாடசாலைகள் ரக்பி லீக் தொடரில் கிண்ணத்திற்கான பிரிவில் கொழும்பு ஜோசப் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி அணிகள் மோதின.

இந்தப் போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் முதல் பகுதி ஆட்டத்தை 14-10 என்ற புள்ளிகள் கணக்கில் கொழும்பு ரோயல் வீரர்கள் வெற்றி கொண்டார்கள்.

இரண்டாம் பகுதியில் ரோயல் கல்லூரி வீரர்கள் அபாரமாக மேலும் 10 புள்ளிகளை சுவீகரித்தார்கள்.

இரண்டாம் பகுதியிலும் கொழும்பு ஜோசப் கல்லூரி வீரர்களால் 7 புள்ளிகளுக்கு மேல் பெற முடியாமற்போனது.

இறுதியில் இந்தப் போட்டியில் 24-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டிய கொழும்பு ரோயல் கல்லூரி அணி சாம்பியனானது.

நிறைவுக்கு வந்த கொழும்பு ரோயல் மற்றும் ஜோசப் கல்லூரி அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடரில் போனஸ் புள்ளியுடன் வெற்றியீட்டுகின்ற அணி இவ்வருட தொடரில் சம்பியனாகும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.

அதன்படி வெற்றியீட்டும் அணி 4 ட்ரைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அந்த விதிமுறையாகும்.

இன்றைய போட்டியில் 4 ட்ரைகளை பூர்த்தி செய்த ரோயல் கல்லூரி அணி சாம்பியனானது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்