கூகுள் மேப் காட்டிய தவறான குறுக்குப் பாதை

கூகுள் மேப் காட்டிய தவறான குறுக்குப் பாதை: ஒரே இடத்தில் குவிந்த 100 கார்கள்

by Bella Dalima 28-06-2019 | 5:12 PM
அமெரிக்காவில் கூகுள் மேப் (Google Map) காட்டிய குறுக்குப் பாதையில் சென்ற சுமார் 100 கார்கள் ஒரே இடத்தில் தவறான வழியில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. நாம் எங்கிருந்தாலும், எங்கு செல்ல வேண்டும் என்றாலும், கூகுள் மேப் காட்டும் பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டோம். அப்படி சென்றபோது அமெரிக்காவில் ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் சர்வதேச விமான நிலையம் செல்ல வெவ்வேறு இடத்தில் இருந்து கொண்டு சிலர் கூகுள் மேப்பின் உதவியை நாடியுள்ளனர். அவர்களுக்கு கூகுள், குறைந்த நேரத்தில் விரைவில் விமான நிலையம் அடைய குறுக்குப் பாதையைக் காட்டியுள்ளது. குறைந்த நேரத்தில் செல்லும் என்பதால் சுமார் 100 பேர் இதனை பின்தொடர்ந்து காரில் சென்றுள்ளனர். இந்த பாதை மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. இருப்பினும் சென்றுள்ளனர். ஒரு இடத்தில் 100 கார்களும் போக வழியின்றி சிக்கியுள்ளன. பின்னர் தான் தெரிந்தது தவறான பாதை என்று. இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், ‘கூகுள் மேப்பில் ஒரு வழியை தெரிவு செய்து காட்டும்போது, சாலையின் அளவு மற்றும் அந்த பாதையில் பயணிக்கும் நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து தான் காட்டுவோம். சில நேரங்களில் இப்படி நடக்கிறது’ என கூறியுள்ளது.