மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்: குருநகரில் சம்பவம்

மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்: குருநகரில் சம்பவம்

மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்: குருநகரில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2019 | 5:23 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில், கணவன் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.
நேற்றைய (27) தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான பெண்ணை அயலவர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று அனுமதித்த போதிலும் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

48 வயதான ராஜூ பெல்சியா என்ற மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]irst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்