டொனால்ட் ட்ரம்ப் – நரேந்திர மோடி சந்திப்பு

டொனால்ட் ட்ரம்ப் – நரேந்திர மோடி சந்திப்பு

டொனால்ட் ட்ரம்ப் – நரேந்திர மோடி சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jun, 2019 | 4:10 pm

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஈரான் வர்த்தகம், பாதுகாப்பு, 5G தொழில்நுட்பம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

ஜப்பானின் ஒசாகாவில் இன்று ஆரம்பமான G20 மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.

மாநாட்டிற்கு முன்னர் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்