by Staff Writer 27-06-2019 | 5:27 PM
Colombo (News 1st) ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்னவினால் கையொப்பமிடப்பட்டு இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
அரச கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நாளாந்த வாழ்க்கையை சிக்கலின்றி முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ரயில் போக்குவரத்து, ரயில் மற்றும் மார்கங்களின் நடவடிக்கைகள், சமிக்ஞை கட்டமைப்பு, போக்குவரத்து பற்றுச்சீட்டு விநியோகித்தல் உள்ளிட்ட ரயில்வே திணைக்களத்தால் முன்னெடுக்கப்படக்கூடிய அனைத்து செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.