கடமையை நிறைவேற்றினால் பிரச்சினைகள் இருக்காது 

பிரதேச செயலாளர்கள் சரியாகக் கடமையை நிறைவேற்றினால் கிராமங்களில் பிரச்சினைகள் இருக்காது: ஜனாதிபதி

by Staff Writer 27-06-2019 | 8:45 PM
Colombo (News 1st) எழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நான்கு பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் இன்று மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பெந்திவெவ மகாவித்தியாலயத்தில் அனைத்து வசதிகளும் கூடியதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறை கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்காக 176 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பிரதேச செயலாளர், கள உத்தியோகத்தர்களுடன் சரியாகக் கடமையை நிறைவேற்றினால் கிராமங்களில் பிரச்சினைகள் இருக்காது என ஜனாதிபதி தெரிவித்தார். அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் பிரதேச செயலாளரேனும் கச்சேரியில் நடைபெறுகின்ற கூட்டங்களின் போது அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். எவ்வாறாயினும், கூட்டங்களின் போது அவர்கள் வாயை மூடிக்கொண்டிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.