பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானை சென்றடைந்தார்

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானை சென்றடைந்தார்

by Staff Writer 27-06-2019 | 8:08 AM
Colombo (News 1st) பாரதப் பிரதமர் நரேந்திரமோடி ஜி - 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானைச் சென்றடைந்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுதினம் ஒசாகா நகரில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கின்றார். இந்த விஜயத்தின்போது, முக்கியமான பன்முகக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி இதன்போது சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். பெண்களுக்கான அதிகாரம், செயற்கை புலனறிவு மற்றும் பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் பொதுவான முயற்சிகள் போன்ற பிரச்சினைகள் தமது நிகழ்ச்சிநிரலில் முக்கிய இடத்திலுள்ளதாக ஜப்பானுக்கு புறப்பட்டுச் செல்லுமுன்னர் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் குறித்த மாநாடானது, சீரமைக்கப்பட்ட பன்முகத்தன்மைக்கு தமது வலுவான ஆதரவை வழங்குவதற்கான முக்கியமான வாய்ப்பினை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பிரதமர் மோடி பங்கேற்கும் ஆறாவது ஜி - 20 மாநாடு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.