இலங்கை போக்குவரத்து சபைக்கு 9 அதி சொகுசு பஸ்கள் கையளிப்பு

by Staff Writer 27-06-2019 | 9:16 PM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபையிடம் 9 அதி சொகுசு பஸ்கள் இன்று கையளிக்கப்பட்டன. புதிய பஸ்களுக்காக 153.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நாட்டின் 7 டிப்போக்களில் இருந்து இந்த அதி சொகுசு பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளன. பாதுகாப்பு கெமரா கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த அதிசொகுசு பஸ்களில் காணப்படுகின்றன.